தென்மேற்கு அரபிக்கடலில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இன்றும், நாளையும் அரபிக்கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயல் உருவாக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு வானிலை ஆய்வு மையம் தகவல் அனுப்பியுள்ளது. மீனவர்கள் தங்கள் பாதுகாப்பு நலன் கருதி கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை, தென்மேற்கு வங்கக்கடலின் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.