விஜயை கவர்ந்த காதல் கதை – விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்

இளம் இயக்குனர் ஒருவர் உருவாக்கிய காதல் கதையை கேட்டு நடிகர் விஜய் அசந்து போன சம்பவம் நடந்துள்ளது.

துருவங்கள் பதினாறு படத்தின் கேரள வினியோகஸ்தராக இருந்தவர் மஹாவிஷ்னு. அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனின் நண்பரான அவர், இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக,  ஒரு அழகிய காதல் கதையை அவர் உருவாக்கியுள்ளார். அந்த கதையை அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், நடிகர் விஜயிடம் கூறியிருக்கிறார். படத்தின் இடைவேளை காட்சியை கேட்ட விஜய் அசந்துவிட்டாராம். அதோடு, கதை மிகவும் அருமையாக இருக்கிறது என பாராட்டினாராம்.

இதனால் புத்துணர்ச்சி அடைந்த மஹாவிஷ்னு, அந்தக் கதையை ஒரு பிரபல ஹீரோவிடம் கூறி சம்மதத்தை பெற்றுள்ளார். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது.