டி.ஆர் நடித்த பழைய திரைப்படங்கள் சிம்பு சிறுவயதில்நடித்த பல படங்களை டி.ஆரின் சொந்த நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ்தான் தயாரித்தது.

சிம்பு அறிமுகமான காதல் அழிவதில்லை,வீராசாமி வரை படம் தயாரித்த இந்த நிறுவனம் பல வருடங்களாக எந்த திரைப்படமும் தயாரிக்கவில்லை.

இந்நிலையில் இன்றைய காதல்டா என்ற தலைப்பில் ஒரு புதிய திரைப்படத்தை  கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை ஒளிப்பதிவு தயாரிப்பு என தனது பாணியில் இந்த படத்தை செய்ய திட்டமிட்டுள்ளார் டி.ஆர்.

நமீதா வித்தியாசமான லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.ராதாரவி,இளவரசு, ரோபோ சங்கர்.வெ.ஆ மூர்த்தி, நினைத்தாலே இனிக்கும் ராஜப்பா என தன வழக்கமான டீமோடு களம் காண்கிறார் டி.ஆர்.