ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோசம் கொடுக்கும் ஸ்கெட்ச் படத்தின் புதிய தகவல்!!!

விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா நடித்துவரும் படம் ஸ்கெட்ச். இந்த படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விக்ரம் பிறந்த நாளான வருகிற 17 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில்தெரிவித்துள்ளார்.

விக்ரம் பிறந்தநாளன்று அவரது படம் கூறித்த புதிய தகவல் விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோசம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இந்த படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.