ஒவ்வாரு விடுமுறையின் போதும் பெரிய படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிப்பதால், சிறு படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் அல்லப்பட்டன. இதனால் போட்டியில் இருந்து விலகி வந்தன. ஆனால் இந்த முறை போட்டியில் குதிக்க முடிவு செய்துவிட்டன. தற்போது அரையாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடக்க உள்ளது. வரும் டிசம்பர் 21ம் தேதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறையும் வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஏராளமான படங்கள் வெளியாக உள்ளது.

தனுசின் மாரி, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, ஜீரோ, கேஎப்ஜே, ஒடியன்,அக்வாமன், உள்ளிட்ட படங்கள் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டிசம்பர் 20ம் தேதியே விஜய் சேதுபதியின் சீதகாதி வெளியாகிறது. ஆனால் டிசம்பர் 14ம் தேதி யாரும் படத்தை திரைக்கு கொண்டுவர ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அரையாண்டு தேர்வு சமயம் என்பதால் யாரும் திரையரங்குக்கு செல்ல மாட்டார்கள் என்பது தயாரிப்பாளர்களின் கணிப்பு. அதனால் படத்தை டிச 21ம் தேதி வெளியிட்டு விடுமுறையில் நல்ல லாபம் பார்க்கலாம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.