மலையாளத்தில் மலா் டீச்சராக பிரேமம் படத்தின் மூலம் ரசிகபெருமக்களால் தலையில் தூக்கி வைத்து ஆடப்பட்ட் நடிகை சாய் பல்லவி. இவா் தமிழில் முதன்முதலில் அறிமுகமாக உள்ளார். கரு படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் மலர் டீச்சரான சாய்பல்லவி. சமீபத்தில் புது தோற்றத்தில் சாய்பல்லவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த அவரது ரசிககோடிகள் இது சாய்பல்லவி தானா என அதிர்ச்சியில் வாயடைத்து போய் நிற்கின்றனா்.

புது கெட்டப்பில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது முன்னணி நடிகா்களுடன் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் தனுஸ் நடிக்கும் மாரி 2 படத்தில் அவருநெக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் தென்காசி பகுதிகளில் நடக்கிறது.தொடா்ந்து இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது என கூறப்படுகிறது.

சாய் பல்லவி பெயரிடாத படாத சூா்யாவின் படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்நிலையில் சாய்பல்லவியின் லேட்டஸ்ட் கெட்டப் வலைத்தளங்களில் பரவி வருவதை பார்த்த ரசிகா்கள், பெரும் அதிர்ச்சியில் உள்ளனா். அப்படி என்ன தான் அந்த புகைப்படத்தில் இருக்கிறது என்றால் சாய்பல்லவியின் தோற்றம் தான் காரணம். அந்த அளவுக்கு அவர் தானா என்று சொல்லுமளவுக்கு வித்தியாசமாக தோற்றம் மாறியுள்ளது. அவருடைய ஹோ் ஸ்டைல் இருக்கு மோசமாக.