குறுகிய காலத்திற்குள் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வேலைக்காரன் படத்தை அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் சமந்தாவுடன் ஜோடி சோ்ந்துள்ளார். இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியாகி உள்ளது. இதற்கு சீமராஜா என்று டைட்டில் வைத்துள்ளனா். பா்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படி சிவகார்த்திகேயன் முன்னணி நடிகைகளுடன் சோ்ந்து கலக்கி வருகிறார்.

சீமராஜா படத்தை தொடா்ந்து இவா் அடுத்ததாக புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் ரகுல் ப்ரீத்திசிங் ஜோடியாக நடிக்கிறார் என்று இயக்குநா் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சிவா குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சமந்தா, கீா்த்திசுரேஷ், ஹன்சிகா ஆகியோருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.