சூர்யாவின் NGK டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் படத்திற்கு NGK என்ற டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த டைட்டிலுக்கு என்ன விரிவாக்கம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

NGK என்றால் நந்த கோபாலன் குமாரன் என்று அர்த்தமாம். இதை படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன் அறிவிக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் இந்த விஷயம் நேற்றே கசிந்துவிட்டது படக்குழுவினர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது