NGK

NGK Trailer Date – செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்.ஜி.கே. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால், இந்த படம் எப்போது வெளிவரும் என காத்திருந்து காத்திருந்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தனர். இப்படத்தின் டீசர் வீடியோ கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வீடியோ இரண்டும் வருகிற 29ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.