சக நடிகைக்கு லிப்கிஸ் கொடுத்த பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா?

ஒரு நடிகர்  ஒரு நடிகைக்கு லிப் கிஸ் கொடுத்தால் அது ரசிகர்களுக்கு ஹாட் நியூஸ். ஆனால் ஒரு நடிகை இன்னொரு நடிகைக்கு லிப்கிஸ் கொடுத்ததை ரசிகர்கள் அருவருப்புடன் பார்க்கின்றார்கள் என்பது அவர்களுடைய டுவீட்ஸ்களில் இருந்து தெரிய வருகிறது.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அரைகுறை ஆடையுடன் கூடிய புகைப்படங்களை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நியா சர்மா. இந்தி தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான இவர், ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்து கொண்டிருந்தபோது திடீரென சக நடிகை ஒருவருக்கு லிப்கிஸ் கொடுத்தார். இந்த காட்சி இயக்குனர் சொன்ன காட்சிதான் என்றாலும் ரசிகர்கள் நடிகை நியாசர்மா மீது கடுப்பாகினர்.

இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களா? என்று கேள்வி கேட்டு டுவிட்டரில் துளைத்தெடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நியாசர்மா, ‘இப்ப என்ன நடந்துவிட்டது? நான் அந்த நடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்தது குறித்து என் குடும்பத்தாரோ, நண்பர்களோ கண்டுகொள்ளவில்லை. இது சாதாரணம் என்று அவர்களுக்கு தெரியும்’ என்று கேஷுவலாக கூறுகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு முத்தம் கொடுத்ததால் நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. அது நடிப்பு அவ்வளவு தான். நிஜ வாழ்க்கையில் நடப்பதை தான் திரையில் காட்டுகிறார்கள் என்று நியா தெரிவித்துள்ளார்.