இயக்குனர் நடிகர் மிஷ்கினின் ஷாட்கள் சினிமா ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். மிக அதிகமான முறையில் ஒருவர் நடந்து செல்வதே நீண்ட நேரம் காண்பிக்கப்படும்.

இரவு நேரம் சாலையோர மனிதர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமான காடுகள், கடைகள், மெல்ல நடந்து வரும் மனிதன் ஒரு கிமீ நடக்கும் வரை பின்புறமாகவும் கால்களையுமே காண்பித்து அப்புறம்தான் அவர் யார் என்பது வழக்கமாக மிஷ்கின் படங்களில் காண்பிக்கப்படும் ஷாட்கள் ஆகும்.

அதுவும் அவரின் படங்கள் ஓணாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட படங்கள் உட்பட எல்லாவற்றிலுமே இரவிலேயே அதிகம் எடுக்கப்பட்ட காட்சிகள் அதிகம் இருக்கும்.

இப்போது எடுக்கப்பட்டு வரும் சைக்கோ படமும் பெரும்பாலும் நைட் ஷூட்தான் அதிகம் எடுக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கிறது.

உதயநிதி பகிர்ந்துள்ள ஒரு டுவிட்டில் கூட நைட் ஷூட் சைக்கோ என தான் ஷூட் செல்லவிருப்பதை பதிவிட்டுள்ளார்.

பிசி ஸ்ரீராம் திறமையான இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் அவரின் ஆரம்பகால மணிரத்னம் படங்களில் இருந்து, அவர் இயக்கிய மீரா திரைப்படம் என அனைத்திலுமே இரவு காட்சிகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இவரது ஒளிப்பதிவை வைத்துதான் மணிரத்னத்துக்கு இருட்டிலேயே படம் எடுக்கும் இயக்குனர் என பெயர் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்போது மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்திற்கு பிசி ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவு செய்கிறார். மிஷ்கினும் இருள் விரும்பி, பிசி ஸ்ரீராமும் இருள் விரும்பி இருவரும் முதல் முறையாக இணைவதாலும் இருவருமே கேமரா கோணங்களை மிக தெளிவாக தெரிந்தவர் என்பதாலும் படத்தின் கேமரா சீக்வன்ஸ்கள் வித்தியாசமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக திறமையான கலைஞர்களோடு  இளையராஜாவும் இசையமைப்பதாலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ராஜாவுடன் பிசி ஸ்ரீராம் இணைவதாலும் மிகுந்த பரபரப்பு இப்படத்துக்கு ஏற்பட்டுள்ளது.