வெற்றிவேல், கிடாரி படங்களில் நடித்து வந்தவர் நிகிலா விமல் இவர் தற்போது மா.கா.பா. ஆனந்த் நடித்த பஞ்சுமிட்டாய் படத்தில் நடித்துள்ளார். நிகிலா விமல் மா.கா.பா ஆனந்த்தை அண்ணன் என அழைத்தாராம்.

இந்த படத்தில் நடிப்பதற்காக கேரளாவில் இருந்து வந்த போது மா.கா.பா. ஆனந்த்தை அறிமுகம் செய்திருக்கிறனர். அப்போது மா.கா.பா சில வார்த்தைகள் பேசிவிட்டு விடைபெறும் போது சரி அண்ணா என்றிருக்கிறார் நிகிலா. இதற்கு மா.கா.பா அண்ணன் என்று கூப்பிடதே. மா.கா.பா என்று கூப்பிடு அல்லது ஆனந்த் என்றாவது கூப்பிடு என்று கூறியிருக்கிறார்.

அனால் அதற்கும் சரி அண்ணா என்றாராம்.இதனால் நமக்கு மனைவியாக நடிக்கும் நடிகை அண்ணா என அழைக்கிறாரே என அதிர்சியில் இருந்திருக்கிறார். இதை பற்றி தன் மனைவியிடம் சொன்ன போது தன் மனைவிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லையாம். பிறகு படப்பிடிப்பிற்கு செல்லும் போது நடிகை நிகிலாவுக்கும் அவ்வபோது தனது வீட்டிலிருந்து சாப்பாடு கொடுத்து அனுப்பினாராம்.