நடனத்தில் கலக்கிய நடன புயல் பிரபுதேவா அடுத்த மைக்கேல் ஜாக்சன் என்று தான் அனைவரும் அழைக்கும் அளவிற்கு புகழ் பெற்றார். தற்போது நடிகை நிகிஷா பட்டேல் பிரபு தேவாவை திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபு தேவா தமிழ் சினிமாவில் ஒரு டான்ஸராக தான் அறிமுகமானார். மின்சாரக் கனவு படத்தில் இடம் பெற்ற வெண்ணிலேவே வெண்ணிலவே பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய அவருக்கு அந்த பாடலுக்கு சிறந்த நடன இயக்குனர் என்ற தேசிய விருதை பெற்றார். பின் தனது சினிமா பயணத்தை மெல்ல மெல்ல அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார். காதலன் படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தார். அந்த படம் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். பின் தனது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக இயக்குனராக கலக்க தொடங்கினார்.

இதையும் படிங்க பாஸ்-  திருமணத்தை பற்றி நடிகை வரலட்சுமி என்ன சொன்னார் தெரியுமா?

பிரபு தேவா தனது மனைவி ராம்லாத் காதலித்து திருமணம் செய்தார். அவருக்கு மூன்று ஆண் குழந்தைகள். இப்படி சினிமாவிலும், தனது சொந்த வாழ்க்கையும் அழகாக சென்று கொண்டிருக்கும் சமயத்தில் புயலாக தனது மூத்தமகனுக்கு புற்றுநோய் பாதித்தால் இறந்து விட்டார். தன்னுடைய மகனின் இறப்பு அவருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தான் நயன்தாரவின் அன்பு அவருக்கு கிடைத்தது. தெள்ள தெளிவாக இருந்த அவரது வாழ்க்கை கானல் நீராக மாறியது.

இதையும் படிங்க பாஸ்-  ரகசியமாக திருமணம் செய்துகொண்ட பாரதிராஜா பட ஹீரோயின்

நயனும், பிரபுதேவாவும் காதலிக்க தொடங்கினார்கள். பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து பிரபு தேவா தனது காதல் மனைவியை விவகாரத்து செய்தார். காதலித்ததால் பிரபு தேவாவுக்காக நயன்தாரா கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதம் மாறினார். அதற்கிடையில் என்ன நடந்தது என்று தெரியல.. இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பின் தனி தனியாக தங்களது சினிமா வாழ்க்கையில் பயணிக்க தொடங்கினர்.

இப்படி பிரபுதேவா தனது திருமணத்தை முறித்து, காதலையும் இழந்து இருக்கும் இந்த சமயத்தில் நடிகை நிகிஷா பட்டேல் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருக்கிறார். நிகிஷா பட்டேல் நீண்ட இடைவெளிக்கு பிறகு கஸ்தூரி இயக்கும் பாண்டிமுனி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். நிகிஷா அண்மையில் அளித்த பேட்டியில், எனக்கு கோலிவுட்டை ரொம்ப பிடிக்கும். அதிலும் பிரபு தேவாவை பிடிக்கும். அவரின் குடும்பத்தோடு என் குடும்பமும் ரொம்ப நெருக்கமாக பழகி வருகிறோம். என்னிடம் பிரபுதேவா கூட நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். நடிப்பது என்ன நான் அவரை திருமணம் செய்து கொள்வே தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். நிகிஷா பட்டேல் கூறிய தகவலை அறிந்த கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  திருப்பதியில் நமீதா திருமணம்: முழுவிபரம்