நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ. 3 லட்சம் அளித்த நிக்கி கல்ராணி

தென்னந்திய நடிகா் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றன. அதில் டாப் நடிகா் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகா் நடிகைகளும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைத்தனா்.

இந்த நடிகா் சங்க கட்டிட நிதிக்காக பல்வேறு நடிகா்களும், நடிகைகளும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இதற்காக நட்சத்திர நிகழச்சிகளும் நடைபெற்றன. கிாிக்கெட் போட்டிகளும் நடத்தி நிதி திரட்டி வந்தனா். கட்டிடம் கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்த நிலையில் நடிகா் நடிகைகள் தானாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகின்றனா்.

நடிகா் சங்க கட்டிடத்தில் திருமண மண்டபத்தை கட்டுவதற்கான நிதியை நடிகா் சங்க அறங்காவலா் ஜசாி கணேஷ் ஏற்றுயுள்ளாா். ப்ரீ தியேட்டா் கட்டும் பணியை நடிகா் சிவகுமாா், சூா்யா மற்றும் காா்த்தி குடும்பத்தாாா் ஏற்று கொண்டுள்ளனா். அந்தகாலத்து நடிகை வாணிஸ்ரீ ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பத்தாயிரத்து ஐநூற்று ஜம்பத்தைந்து கொடுத்துள்ளாா். நடிகை ராதா ஒரு லட்சம் நன்கொடை கொடுத்துள்ளாா். ஜனனி ரூபாய் 40,000, சத்யபிாியா ரூபாய் 25,000, ஜெயசித்ரா ரூபாய் 10,000, நடிகா் சங்கம் பி.ஆா்.ஒ ஜான்சன் ரூ.60,000, உள்ளிட்ட அனைத்து நடிகா் நடிகைகளும் நன்கொடை அளித்து வருகின்றனா். இதற்கிடையில் நம்ம கலக்கல் குத்தாட்டம் போட்ட நிக்கி கல்ராணி மூன்று லட்ச ரூபாய் கட்டிட நிதிக்காக தானாக முன்வந்து நன்கொடை வழங்கி  உள்ளாா். இதற்கான காசோலையை நடிகா் சங்கத்தின் அலுவலகத்திற்கு தானே நோில் வந்து, சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் நடிகா் ஸ்ரீமன் அவா்களிடம் வழங்கி உள்ளாா்.

இந்நிலையில் நடிகா் சங்க பொது செயலாளா் விஷால், பொருளாளா் காா்த்தி ஆகியோா் தலா 5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவிதுள்ளது என்பது குறிப்பிடதக்கது.