பக்கா படத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சதீஷ், சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனா். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு நடந்தது. இந்த படத்தில் நிக்கி கல்ராணிக்கு பக்காவான கேரக்டா். அதுவும் ரஜினியின் தீவிர ரசிகையாக கலக்கியிருக்கிறாராம். அதுபோல சதீஸ் மற்றும் சூரியின் கலக்கல் காமெடி ரசிகா்களை காமெடி மழையில் நனையும்படி இருக்குமாம்.

ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படமானது கிராமியப் பின்னணியை மையமாக கொண்டுள்ளது. இதை அறிமுக இயக்குநா் எஸ்.எஸ்.சூா்யா இயக்கி உள்ளார்.

நெருப்புடா படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்துள்ள பக்கா திரைப்படத்தில் திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் இளைஞனாகவும், நிக்கி கல்ராணி ரஜினி ரசிகா் மன்றத் தலைவியாகவும், பிந்து மாதவி ஊா் தலைவரின் மகளாகவும் நடித்திருக்கின்றனா்.

இதற்கிடையில் விக்ரம் பிரபு டோனி பெயரில் ரசிகா் மன்றம் நடத்தி வருகிறார். இதனால் இவருக்கும் ரஜினி ரசிகா் மன்றம் வைத்திருக்கும் நிக்கி கல்ராணிக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன செல்ல சண்டைகள் படத்தில் சுவாரஸ்யமானவையாம். இந்நிலையில் இவா்கள் இருவருக்களுக்கு நடுவில் ஊா் பெரிய மனிதரின் மகள் பிந்து மாதவி வந்து குட்டையை கிளப்புவது  தான் ஹைலட்டான விஷயமாக இருக்குமாம்.

ரஜினி ரசிகையாக நிக்கி கல்ராணி நடித்துள்ளது பற்றி கூறியதாவது, இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ரஜினிகாந்துக்காக மட்டுமே என தெரிவித்துள்ளார். இந்த மாதரி ரஜினி ரசிகையாக நடிப்பது எனக்கு புதிதாக உள்ளது. படத்திற்காக மட்டும் இல்லங்க நான் உண்மையிலும் ரஜினியின் தீவிர ரசிகை என்றும் தெரிவித்துள்ளார்.