தமிழ்நாட்டு மருமகளாகும் நிக்கி கல்ராணி?

10:23 காலை

கன்னட திரையுலகில் இருந்து ‘டார்லிங்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து ‘யாகாவாராயினும் நா காக்க’, ‘கோ-2’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த வருடத்தில் இவர் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘மரகத நாணயம்’, ‘நெருப்புடா’ இந்த மூன்று படங்களும் அவரை வித்தியாசப்படுத்தி காட்டின.

எங்கு சென்றாலும் தனக்கு கிடைக்கும் வரவேற்பை கண்டு மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் நிக்கி கல்ராணி கைவசம் அரை டசன் படங்கள் உள்ளன. தற்போது தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிக்கி கல்ராணிக்கு தமிழ்நாட்டு மருமகளாகும் கனவும் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். தனது திருமணப் பேச்சு பற்றி கேட்ட கேள்விக்கு அவர் கூறும்போது,

இப்போதைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இன்னும் சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் என்பதே கிடையாது. இப்போதைக்கு எது நடந்து கொண்டிருக்கிறதோ அதுவே நிஜம். நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது, அதை சொல்லவும் முடியாது. அதனால், பிற்காலத்துல நான் தமிழ்நாட்டு மருமகளாகக்கூட ஆகலாம். அது நடக்கிறபோது அதைப் பற்றி பேசலாம் என்று முடித்தார்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com