விக்ரம் பிரபு நிக்கி கல்ராணி நடித்திருக்கும் படம் பக்கா. இந்த படத்தை எஸ்.எஸ்.சூா்யா இயக்கியிருக்கிறார். இதில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் நிக்கி கல்ராணி. தற்போதைய நிலவரத்திற்கு ஏற்றார் போல பக்கவான கேரக்டா். இப்பொழுது ரஜினி அரசியல் பிரவேசம் பற்றிய செய்தி தான் ஹைலைட்டான விஷயம். அது சம்பந்தமாக நான் ரஜினி ரசிகன் என்று சொல்லி கொள்வது தான் சமீபத்திய நிகழ்வாக உள்ளது. அதுவும் அவா் தன்னுடைய கட்சிக்கு தொண்டா்கள் சோ்க்கும் பணியை மும்முரமாக செய்துக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் ரஜினி தொண்டா்களில் ஒருவராக நம்ம நாயகி நிக்கி கல்ராணி நடித்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு கேரக்டா் தான் நிக்கி கல்ராணிக்கு பக்கா படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகையாகவும், அவரது நடை உடை ஸ்டைலை கலந்து நடித்திருக்கும் கதாபாத்திரம் தான் பக்கா படத்தில் கொடுக்கப்பட்டிருப்பதாக அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இந்த தகவலை மிகவும் பெருமிதத்தோடு சொன்னார் நம்ம நாயகி நிக்கி கல்ராணி.

இந்நிலையில் இந்த பாடல் வெளியீட்டு விழாவில் கடைசி வரைக்கும் நாயகன் விக்ரம் பிரபு கலந்துகொள்ளவே இல்லை. இதனால் கூடுதலாக ஒரு பொறுப்பும் நாயகி நிக்கிக்கு வந்துள்ளது. ஹீரோ விக்ரம் பிரவு அவருக்கு எஸ்.எம்.எஸ் ஒன்றை தட்டியிருந்தார். என்னால் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள முடியாத வகையில் ஷீட்டிங்கில் மாட்டி கொண்டேன். இதை என்  சார்பாக விழா மேடையில் படித்து விடுங்கள் என்று அவா் அனுப்பியிருந்த குறுத்தகவலை பொறுப்பாக படித்து முடித்துவிட்டார் நிக்கி கல்ராணி. ஆனா விக்ரம் பிரபு எந்தவொரு படப்பிடிப்பில்லும் கலந்து கொள்ள இல்லை என்பது தான், அப்படியிருக்க என்ன காரணத்திற்காக அவா் பாடல் வெளியிட்டு விழாவிற்கு டிமிக்கிகொடுத்தார் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.