சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை செய்துகொண்ட லலித்குமார் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகை நிலானி சமீபத்தில் காவல் நிலைத்திற்கு சென்று புகார் அளித்தார். அதில் லலித்குமார் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்ள மிரட்டுவதாக தெரிவித்திருந்தார். லலித்குமார் யாரென்றே தெரியாதென்றும் கூறியிருந்தார்.

லலித்குமார் சின்னத்திரையில் உதவி இயனக்குனராக பணிபுரிந்து வந்தார். நிலானி புகார் அளித்ததால் மனமுடைந்த லலித்குமார் சென்னை கே.கே.நகரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் லலித்குமாரும், நிலானியும் நெருக்கமாய் இருந்த புகைப்படங்கள் வெளியானது. இதனையடுத்து நிலானி தனது இரண்டு குழந்தைகளை பரிதவிக்கவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியானது.

இன்று காலை கமிஷனர் அலுவகம் சென்ற நிலானி ஒரு மனுவை அளித்தார். அதில் லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல. அவரை நான் காதலித்தது உண்மை தான். ஆனால் அவன் ஒரு சைக்கோ என்பது தெரிந்து அவனை விட்டு விலகினேன் என கூறினார்.

இந்நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த நிலானி நான் எங்கும் தலைமறைவாக  இல்லை. நான் ஒரு அனாதை, கணவரும் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் என்னை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்தேன். அப்போது எனக்கு லலித்குமார் சிறு சிறு உதவிகள் செய்து வந்தார். ஒரு சமயம் நானும் அனாதை நீயும் அனாதை, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா என கேட்டார். நான் மறுத்துவிட்டேன். பின்னர் எனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தேன்.

அவனிடம் பழகி 6 மாதத்திற்கு பின்னர் தான் தெரிந்தது அவன் ஒரு மோசடி பேர்வழி என்று. அவன் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி பணத்தை பறித்தவன். தனலட்சுமி என்ற பெண்ணை ஏமாற்றி ஒன்றரை லட்சம் பணம் பறித்துள்ளான். இதனால் நான் அவனை விட்டு விலகினேன். ஆனால் என்னை விடாத அவன், அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்தான். 2 வருடத்திற்கு முன்பாக போலீஸில் புகார் அளித்தேன். போலீஸார் அவனை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினர். சற்று காலம் அமைதியாக இருந்தான்.

தற்போது மீண்டும் வந்து என்னை திருமணம் செய்து கொள்ளக்கூறி தொந்தரவு கொடுத்தான். எனவே, நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.  அவன் தற்கொலைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. தயவுசெய்து எனது பெயரை தேவையில்லாமல் கெடுக்காதீர்கள் என கண்ணீர் மல்க பேசினார்.