Nirav Modi arrest : நிதி முறை கேட்டில் வெளிநாடு தப்பி சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு ஓடியவர் நீரவ் மோடி. அவரை இந்தியா கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக லண்டன் நீதிமன்றம் அவருக்கு வாரண்ட் பிறப்பித்தது.

இந்நிலையில், லண்டன் போலீசார் அவரை இன்று கைது செய்தனர். இதையடுத்து லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

சமீபத்தில் லண்டன் நகரில் சாலையில் அவர் சாதரணமாக நடமாடும் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.