Nirmala Devi – கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய புகாரில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி சாமி வந்ததுபோல் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

11 மாதங்களாக சிறையில் இருந்த நிர்மலா தேவி கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின் இந்த வழக்கு தொடர்பாக அவர் அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராக வரும் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் நீதிமன்றத்துக்கு வந்த அவர் வித்தியாசமாக நடந்து கொண்டார். சாமி வந்தது போல் பேசினார். அவரிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என அங்கிருந்த பலரும் கேட்டனர். அப்போது, என் கணவர், உறவுகள் எல்லாவற்றையும் இங்கு வரச்சொல். அப்போதுதான் கண்ணை திறப்பேன் என அவர் பேசிக்கொண்டே இருந்தார். இதனால், நீதிமன்றத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.