நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர்கள் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் அவர்கள் நீட் தேர்வு தோல்வியால் தான் தற்கொலை செய்துகொண்டார்களா என சந்தேகம் உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தேர்வால் தங்கள் மருத்துவக் கனவுகள் உடைந்ததால் நாடு முழுவதும் இதுவரை ஐந்து மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். தமிழகத்தில் பிரதீபா, சுபஸ்ரீ என்ற இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த ஆண்டு அனிதா என்ற மாணவி தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க பாஸ்-  டாய்லெட்டால் வந்த வினை - திருமணமான 3 நாளில் மணமகன் தற்கொலை

இந்நிலையில் இந்த ஆண்டும் நீட் பிரச்சனை காரணமாக மாணவ மாணவியரின் தற்கொலை தொடர்வது சர்ச்சையையும், அரசுக்கு அழுத்தத்தையும் கொடுத்துள்ளது. நேற்றும் ஒரு மாணவி நீட் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட்டால் மட்டும்தான் மாணவர்கள் இறந்தார்களா என்பது கேள்விக்குறி. அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். நீட் தேர்வால்தான் இறந்தார்கள் என்பது சந்தேகம்தான். மாணவர்களைப் பயிற்றுவிக்க போதிய வசதிகள் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.