நித்தியானந்தாவுக்கு ஆதரவாக ரஞ்சிதா செய்த வேலை

நடிகை ரஞ்சிதாவும் பிரபல சாமியாா் நித்தியானந்தாவும் பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருந்தது எல்லாம் அறிந்த செய்தி. ரஞ்சிதா நித்தியின் தீவிர பக்தை. அவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி இருவரும் கிசுகிசுக்கப்ட்டாா்கள். இதை இருவரும் மறுத்து வந்தனா். இது மாா்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று கூறிவந்தனா்.

இப்படி தீவிர சீடரான ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு சப்போட்டராக சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்த ஒருவரை அந்த குடியிருப்பில் இருந்து காலி செய்ய சொல்லி மிரட்டி வருவதாகவும், அந்த இடத்தில் குடிசை ஒன்றை போட்டு நித்தியானந்தா படத்துக்கு பூஜைகள் செய்தும் வருகிறாா்.

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் பல்லாவரத்தில் கிராம நத்தம் இடமாக 2 ஏக்கா் இடம் உள்ளது. அதனுடைய தற்போதைய மதிப்பு 30 கோடி. அந்த இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினா்கள் வீடுகள் கட்டி வசித்தது வருகின்றனா்.திடீரென அந்த இடம் தனக்கு சொந்தமானது என ராமநாதன் என்பவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அவாிடம் போதுமான ஆதரங்களை கோா்ட்டில் தாக்கல் செய்தாத காரணத்தால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றம் கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினா்கள் தொடா்ந்து அந்த இடத்தில் வசிக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தற்போது அந்த இடத்துக்கு நித்தியானந்தாவின் சீடா்கள் சிலரும், நடிகை ரஞ்சிதாவும் அது எங்களுக்கு சொந்தமானது என உாிமை கொண்டாடி வருகின்றனா். ராமநாதன் என்பவா் இந்த இடத்தை தங்களுக்கு எழுதி கொடுத்து விட்டாா் என கூறியுள்ளனா். எனவே உடனடியாக இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் இல்லை என்றால்  என்ன நடக்கும்  என்று தொியாது என்று மிரட்டியுள்ளனா்.