nithya

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பேசுவதிலிருந்து தெரிகிறது ஏதோவது செய்வார்கள் என்று இனி வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ஏற்கனவே கணவன் மனைவி இருவரும் பிரச்சனை காரணமாக பிரிந்து ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பிக் பாஸ் சீசன் 2வில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலமாக தாடி பாலாஜியையும் அவரது மனைவி நித்யாவையும் சேர்த்து வைக்க போகிறார்களா? அல்லது பிரச்சனை பெரியதாக போகிறார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

balaji

தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திலிருந்து ஒருவருக்கொருவா் நட்புடன் தான் சிரித்து பழகி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய புரோமோவில் அவர்கள் இருவர்களுக்குமிடையில் பிரச்சனை ஏற்படுவது போல காட்டப்பட்டுள்ளது. வெங்காயத்தின் மூலம் பிரச்சனையை ஏற்படுத்த பிக் பாஸ் முயலகிறார். வெங்காயம் பிரச்சனையில் இருவரும் முட்டி கொண்டது பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாஜி பொறியலில் வெங்காயம் போட வேண்டும் என்று நித்யாவை பார்த்து கூற அதற்கு அவரது மனைவி நித்யா எந்தவித பதிலும் கூறாமல் முறைக்கிறார். அப்போது சமையல் டீமில் உள்ள மும்தாஜ் குறுக்கிட்டு, “பேசுங்கம்மா வெங்காயம்” என்று கூறி நித்யாவை வெறுப்பேற்றுகிறார். நித்யாவை பார்த்து உங்கள் பெர்சனல் விஷயத்துக்கான சண்டையால வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு கவலை ஏற்படுகிறது என்று மும்தாஜ் அறிவுரை கூறினாலும் பாலாஜியும் நித்யாவும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டது தான் இன்றைய நிகழ்ச்சியின் ஹாட்டாக இருக்கும் என்று பார்வையாளர்கள் மத்தியில் பேச படுகிறது.

janani iyar

இந்த வெங்காய பஞ்சாயத்தை பாலாஜி, இன்னிக்கு இந்த வெங்காயத்தை சேர்த்தால் என்ன ஆகிவிட போகிறது என்று கேட்கிறார். இதற்கிடையில் வீட்டின் தலைவர் ஜனனி ஐயர் மற்றும் டேனியல் மைக்கில் பிக் பாஸிடம் இன்று வீட்டில் சண்டை நடந்துள்ளது.அதனால் யாருக்கும் சாப்பாடு கிடைக்காது. நீங்கள் கடையிலிருந்து சாப்பாடு அனுப்பி விடுங்கள் நான் வெளியே வந்த பிறகு பணம் கொடுத்து விடுகிறேன் என்று கூறுகிறார். இது இன்றைய புரோமோவில் வெளியாகி உள்ளது.