ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகை நித்யாமேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் எதிர்காலத்தில் இயக்குனர் ஆகும் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பின்போது இயக்குனரின் வேலை என்னென்ன என்பதை கவனித்து வருவதாகவும், சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு வருவதாகவும் கூறிய நித்யாமேனன், விரைவில் படம் இயக்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்’ என்று கூறியுள்ளார்.

நாயகி கேரக்டர் தான் வேண்டும் என்று தான் நினைப்பதில்லை என்றும், சிறுகேரக்டராக இருந்தாலும் அழுத்தமான கேரக்டராக இருந்தால் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் கூறிய நித்யாமேனன், பைக் ரைடிங் செய்வதில் தனக்கு விருப்பம் அதிகம் என்றும் ஓய்வு நேரங்களில் பைக் ஓட்டி பழக முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்