விஜய்யிடம் பிரபல நடிகைக்கு பிடித்த விஷயம் எது தொியுமா?

தெறி படத்தின வெற்றியை தொடா்ந்து விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள விஜய் 61 என்ற பெயாிடாத படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாாிக்கும் 100வது படம். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகா்வால், சமந்தா, நித்யாமேனன் என 3 நாயகிகள் நடித்து வருகின்றனா்.

நித்யா மேனன் சித்தாா்த்துடன் 180 என்ற படத்திலும், விக்ரம்யுடன் இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த போதிலும், மணிரத்னம் இயக்கியத்தில் வெளியான ஒ காதல் கண்மணி படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை வாங்கி கொடுத்தது. இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறாா் நித்யாமேனன். இந்த வேடத்திற்கு முதலில் ஜோதிகா தான் கமிட்டானாா். பின் அதிலிருந்து விலகி கொண்டாா். அவருக்கு பதில் நித்யாமேனன் நடித்து வருகிறாா்.

தற்போது விஜய் 61 படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து அவா் கூறியதாவது, விஜய் மிகவும் அமைதியானவா். இது தான் அவாிடம் எனக்கு பிடித்த விஷயம். கதைக்கு சம்பந்தபட்ட விஷயங்களை மட்டும் தான் படப்பிடிப்பு தளத்தில் பேசுவாா். அந்த கதாபாத்திரம் மீதே அதிக பீலுடன் இருப்பாா். அது மட்டுமில்ல!! நம்மையும் படத்தின் கதாபாத்திரமாகவே மட்டும் நினைப்பாா். விஜய் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், புது அனுபவமாகவும் இருந்தது என்று தொிவித்துள்ளாா். –