பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இன்ப அதிர்ச்சி அளித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக குடும்பத்தினரை பிரிந்து இருக்கும் இவர்களுக்கு இது மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

இதில் பாலாஜியின் மனைவி நித்யா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நான் உனக்கு தோழியாக எப்போதும் இருப்பேன் என்று கூறியுள்ளார். இதனை ஜனனி வாசித்தபோது பாலாஜி கண்ணீர் விட்டு அழுதார்.

nitya

இந்த நிலையில் பாலாஜியின் கண்ணீர் சிந்தியதை பார்த்த நித்யா தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலாஜி கண்ணீர் சிந்துவதை 9வருடங்கள்கழித்து இப்போதுதான் பார்க்கிறேன். அவரை ஒருமனிதராக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார். நித்யாவின் இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

Loading...