nivethapethuraj

ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அடியெடுத்து வைத்தார் நிவேதா பெத்துராஜ். இவரது பூர்வீகம் தமிழ்நாடு தான். துபாயில் வசித்து வரும் மதுரை வாழ் தமிழ் பெண்ணான இவருக்கு கோலிவுட் சினிமா உலகம் தன் கை விரித்து அடைக்கலம் கொடுத்தது.

அதன் பின் தொடர்ந்து படவாய்ப்புகள் அவரை தேடி வந்தன. பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து கொண்டார். அதன்பின்னர் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் டிக்டிக்டிக் படத்தில் நடித்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

tik tik tik

இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்திலும் பிரபுதேவா ஜோடியாக பொன் மாணிக்கவேல் படத்திலும் நடித்து வருகிறார். பார்ட்டி படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படத்திற்கான போஸ்ட் புரொக்ஷ்ன் பணிகள் நடந்து வருகிறது. ஜெகதல கில்லாடி படத்தில் நடித்து வருகிறார்.

பிரவு தேவாவுடன் ஜோடியாக நடிக்கும் பொன் மாணிக்கவேல் படத்தை ஏ.சி.முகில் இயக்கு வருகிறார்.இந்த படத்தில் பிரபுதேவா உதவி கமி‌ஷனர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுபோல நிவேதாவுக்கும் இந்த படத்தில் போலீஸ் வேடமாம். ஆகவே சண்டைகாட்சிகளில் இனி நிவேதாவை பார்க்கலாம். ஏனெனில் இதில் நிவேதாவுக்கு சண்டைக்காட்சிகள் இருக்கிறாதாம். அதற்கான பயிற்சிகளை நிவேதா செய்து வருகிறாராம்.

அண்மையில் ஒரு பேட்டியில், ஏற்கனவே நிவேதாவுக்கு மல்யுத்தம், குத்துச்சண்டை தெரியும்னு கூறியிருந்தார். எனவே இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்க இருக்கும் இவரிடம் அடிவாங்கப்போவது யார் யாரொல்லாம் என்பது தெரியல. நிவேதா பெத்துராஜ் வடிவத்தில் சினிமா உலகத்திற்கு அடுத்த விஜயசாந்தி கிடைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அப்ப நிவேதா விஜயசாந்தியா இல்லை குடும்ப குத்துவிளக்கு பெண்ணாக நடிப்பரா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

Loading...