ஓவியாவை வெளியேற்றிவிட்டு அஜித்துக்கு ஐஸ் வைக்கும் விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறிவிட்டதால் ஓவியா ஆர்மியினர்களால் கழுவி கழுவி ஊற்றப்பட்டு வரும் நிலையில், அந்த டிவியின் டுவிட்டர் பக்கத்தில் அஜித்துக்கு ஐஸ் வைத்துள்ளது.

ஒவ்வொரு நாளும், காலை, மதியம், மற்றும் மாலை என மூன்று பிக்பாஸ் புரமோ வீடியோக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை முதல் ஒரு புரமோ வீடியோ கூட வெளிவரவில்லை

மேலும் புரமோ வீடியோவுக்கு பதிலாக அஜித்தின் 25 ஆண்டுகால சேவைக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அஜித்துக்கு ஐஸ் வைத்து அஜித் ரசிகர்களின் ஆதரவால் ஓவியா ஆர்மியினர்களை சமாளிக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.