நடிகர் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் நடித்த காலா திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் கடந்த 7-ஆம் தேதி வியாழக்கிழமை வெளியானது. இது மக்களின் ஆதரவை பெறாததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

காலா திரைப்படம் தமிழகத்தில் 650 தியேட்டர்களிலும், உலகம் முழுவதிலும் 2500 தியேட்டர்களிலும் வெளியானது. தொடக்கம் முதலே காலா படத்தின் டிக்கெட் விற்பனை மந்தமாகவே இருந்தது. பொதுவாக ரஜினி படங்களுக்கு டிக்கெட் ரேட் அதிகமாக இருக்கும், ஆனாலும் டிக்கெட் கிடைப்பது கடினம். ஆனால் இந்தமுறை டிக்கெட் மிகவும் எளிதாக கிடைத்தது. பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகவே இல்லை.

இதையும் படிங்க பாஸ்-  பாகுபலி2 ரிலீஸால் பரிதவிக்கும் புதிய தமிழ் படங்கள்...

இதனால் படத்தின் வசூலும் பெருமளவு பாதித்தது. காலா படம் வெளியான மூன்றே நாட்களில் தியேட்டர்களில் காத்து வாங்குகிறது. பல தியேட்டர்களில் 30 பேர் 40 பேர் என அமர்ந்து படம் பார்க்கிறார்கள். படம் இந்த அளவுக்கு காத்து வாங்குவதற்கு முக்கிய காரணம் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ரஜினி கூறிய சர்ச்சைக்குறிய கருத்து தான்.