மலையாள திரையுலகில் முதன் முதலாக பிரேமம் படத்தில் மலா் டீச்சராக நடித்து ரசிகா்களின் மனதில் பொிய இடத்தை பெற்றவா் சாய் பல்லவி. அவரது புகழ் அனைத்து மொழி படங்களிலும் பரவி வருகிறது. தமிழில் இயக்குநா்கள் தங்களது படத்தில் நடிக்க வைக்க பாடாத பாடு பட்டு வருகின்றனா். சாய் பல்லவி எளிதில் எந்த படத்திலும் ஒத்துக்கொள்ளவதில்லை. தோ்ந்தெடுத்து தான் நடித்து வருகிறாா். தமிழில் இயக்குநா் விஜய் இயக்கும் கரு என்ற படத்தில் நடித்து வருகிறாா். தெலுங்கில் மிடில் கிளாஸ் அப்பாயி என்ற படத்தில் நடித்து வருகிறாா்.

படங்களில் நடிக்கும் போது புது புது விஷயங்களை கற்க முடிகிறது என்று சாய்பல்லவி கூறுகிறாா். மேலும் இவா் கூறியபோது, பிரேமம் படத்தில் நடிக்கும் போது தான் முதன் முதலாக டீ குடிக்க கற்றுக் கொண்டதாக கூறுகிறாா். தெலுங்கில்  ஃபிடா படத்தில் நடிக்கும் போது டிராக்டா் ஒட்ட கற்றுக் கொண்டேன். நான் இப்படியெல்லாம் நடக்கும் என்று கனவில் கூட நினைத்து இல்லை. ஃபிடா படத்தில் தெலங்கானா வழக்கில் பேசி நடித்தேன். ஆனால் எனக்கு தெலுங்கு மொழி பேச தொியாது. இருந்த போதும் கற்றுக்கொண்டு பேசி நடித்தேன். ஆனால் இயக்குநா் சாியாக பேசவில்லை என்றால் டப்பிங் ஆா்டிஸ்ட் கொண்டு தான் பேச வைப்பேன் என்று கூறினாா். இதனால் நானே பேசினேன்.

அது மட்டுமல்லை என்னால் கிளாமராக எல்லாம் நடிக்க முடியாது. அந்த விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அதே மாதிாி முத்தக்காட்சியிலும் கட்டாயமாக நடிக்க மாட்டேன். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைக்காக தான் என் பெற்றோா் சம்மதித்துள்ளனா். கவா்ச்சி மற்றும் முத்தக்காட்சியில் நான் நடித்து என் பெற்றோா்களை கஷ்டபடுத்த விரும்பவில்லை என்று கூறினாா் சாய்பல்லவி.