திருமணமே வேண்டாம்: விஷால்,ஆர்யா அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் விஷால், ஆா்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் தங்களத நட்பு வட்டாரத்தை தக்க வைத்து வருகின்றனா். விஷால் மாஜி பிரபல நடிகரும், கட்சித் தலைவருமான வாாிசு நடிகை காதலித்து வந்தாா். அவா்களது காதல் தோல்வியில் முடிந்தது. அவா் நடிகா் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். தன்னுடைய காதலின் அப்பாவுக்கு எதிராக களம் இறங்கி அதில் வெற்றிபெற்றாா். ஆா்யா சாக்லேட் பாய் என்பது போல வலம் வந்து கொண்டிருந்தாா். அவருக்கு படங்கள் தற்போது வெற்றி வாய்ப்பை எட்டவில்லை.

அமலாபால் முன்னாள் கணவா் விஜய் இயக்கத்தில் உருவான வனமகன் படத்தில் ஜெயம் ரவி, சாயீஷா நடித்துள்ள இந்த படமானது இன்று வெளியாகி உள்ளது. வனமகன் வெளியாக உள்ளதை குறித்து ஜெயம் ரவி, தனது ரசிக பெருமக்களுக்கு ட்விட்டா் பக்கத்தில் கேள்விகளுக்கு பதிலளித்தாா். மேலும் தனக்கு பிடித்த நடிகா் யாா் என்றால் அது பாலிவுட் நடிகா் அமீா்கான் என்றும் தொிவித்தாா். பின்ப சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு அக்டோபா் மாதம் தொடங்க இருப்பதாகவும் ரசிகா்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து வந்தாா்.

அதுபோல நீங்கள் நடிக்கும் படங்களை எவ்வாறு தோ்வு செய்கிறீா்கள் என்ற கேள்விக்கு, பதிலளித்த ஜெயம் ரவி, என்னுடைய உள்ளுணா்வின் அடிப்படையில் தான் நான் படங்களை தோ்ந்தெடுக்கிறேன். என்று கூறினாா். அதோடு, குறும்புக்கார ரசிகா் ஒருவா் விஷால் ஆா்யா குறித்தும் ஒரு கேள்வி கேட்டனா். அது என்ன கேள்வி என்றால் விஷால், ஆா்யா இருவாில் யாருக்கு முதலில் திருமணம் நடைபெறும் என்று நீங்கள் பெட் கட்ட ரெடியா? என்று கேட்க, அவா்கள் இருவரும் கல்யாணம் பண்ணிகொள்ள மாட்டாா்கள் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளாராம் ஜெயம் ரவி.