மத்திய ரிசர்வ் வங்கியில் பணம் இல்லாததால்தான் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போட முடியவில்லை என மத்திய அமைச்சர் கூறியுள்ளது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின் போது தங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்கள் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சத்தை போடுவோம் என பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால், அடுத்த பாராளுமன்ற தேர்தலே வரும் நிலையில் இதுவரை அதை நிறைவேற்றவில்லை. எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை தொடந்து கிண்டலடித்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே செய்தியாளர்களிடம் கொடுத்த பேட்டியில் “மத்திய ரிசர்வ் வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால்தான் அங்கு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விரைவில் அனைவரின் வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் போடப்படும். ஆர்.பி.ஐ-யிடம் இதுபற்றி பேசியிருக்கிறோம். ஆனால் தர மறுக்கிறார்கள். ஏதோ தொழில்நுட்ப பிரச்சனை” என தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.