சமீபத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளினாலும் இந்த படத்திற்கு நாலாபக்கங்களில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்த படத்தை பார்ப்பவர்கள் டிஷ்யூ பேப்பரை கையில் வைத்து கொள்ளவும் என்ற வாசகத்துடன் தொடங்கும் இந்த படத்தில் ஆபாச காட்சிகள் , இரட்டை அர்த்த வசனங்கள் குவிந்துள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தனது டுவிட்டரில் தனது அடுத்த தயாரிப்பான ‘அண்டாவ காணோம்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இந்த படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவாது: ‘இந்த படத்தை பார்க்க யாரும் டிஷ்யூ பேப்பருடன் வரவேண்டாம். குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு ‘யூ’ சான்றிதழ் படம். ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இதில் இல்லை. குறிப்பாக படம் முடிந்தவுடன் தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

விஷால் அண்ணன் மனைவியும் திமிறு படத்தில் வில்லியாக நடித்தவருமான ஸ்ரேயா ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை வேல்மதி என்பவர் இயக்கியுள்ளார்