அரசியலே வேணாம் சாமி- ஓட்டம் பிடித்த அர்ஜூன்

ஆக்சன் கிங் என்றாலே அனைவருக்கு நன்கு தெரியும் அவர் அர்ஜூன் என்று. அதிரடி சண்டைக் காட்சிகள் மூலம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்கள் கட்டி வைத்திருந்தார். நடிப்பு மட்டுமின்றி இயக்கம்,தாயாரிப்பு போன்ற பன்முக திறமை கொண்டவர் . இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் நிபுணன். இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர்கள் ஆக.1ம் தேதி அன்று  நடைபெற்றது.

அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் அர்ஜுனிடம், உங்கள் பல படங்களில் சமுதாயம் சார்ந்த கருத்துகள் இருக்கின்றனவே உங்களுக்கும் அரசியல் எண்ணம் உண்டா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அர்ஜுன், எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை. நான் படம் நடிக்கவும், திரைப்படங்களை இயக்கவுமே ஆசைப்படுகிறேன். என் மகள் ஐஸ்வர்யாவை வைத்து, சொல்லிவிடவா என்ற படம் இயக்கி வருகிறேன். மேலும் விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறேன் என்று தெரிவித்தார்.