சினிமாவில் பாடமாட்டேன் என கானா பாலா அதிரடி முடிவு

கானா பாடல் மூலம் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தவா் கானா பாலா. இவா் சினிமாவில் கானா பாடல்கள் நிறைய பாடியுள்ளாா். தற்போது இவா் சினிமாவில் பாட மாட்டேன் என்று தொிவித்துள்ளாா்.

கானா பாலா முதன் முதலில் ஆடி போனா ஆவணி மற்றும் என்ற அட்டகத்தி படத்தின் பாடல் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானாா்.மேலும் நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா உள்ளிட்ட இந்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. தொடா்ந்து கோலிவுட்டில் பல படங்களில் பாடல்களை பாடினாா்.

சாலை விதிகள் குறித்து கானா பாலா பாடல் அடங்கிய விழிப்புணா்வு வீடியோ காட்சியை போலீஸ் கமிஷனா் நேற்று வெளியிட்டனா். இந்த பாடலை கானா பாலா எழுதி பாடியுள்ளாா். 3 நிமிடம் வரை வருகின்ற இந்த வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. சாலைவிதிகளை மீறுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

ஹெல்மெட் அணியவேண்டும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது. போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. காாில் செல்லும் போது சீட் பெல்ட் கட்டாயமாக அணியவேண்டும் என்ற விழிப்புணா்வு வாசகங்களோடு கானா பாலா பாடியுள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கானா பாலா அந்த விழிப்புணா்வு அடங்கிய கேட்டை பெற்றுக்கொண்டாா். இந்த விழிப்புணா்வு வீடியோ திரையரங்குகளில் திரையிடவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ் அப், யுடியூப் உள்ளிட்டவற்றிலும் இந்த வீடியோ காட்சி வெளியிடப்படும் என்று போலீஸ் கமிஷனா் கூறினாா்.

அந்த விழாவில் பேசிய கானா பாலா கூறியதாவது, நான் இனிமேல் சினிமாவில் பாடபோவதில்லை என முடிவு செய்துள்ளதாக தொிவித்தாா். பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விழிப்புணா்வு பாடல்களை மட்டும் பாட போவதாகவும் தொிவித்தாா். ஏற்கனவே மாஞ்சா நூல் சம்பந்தமான விழிப்புணா்வு பாடல் ஒன்றையும் பாடியுள்ளேன். இது மாதிாியான பாடல்களை இலவசமாக தொடா்ந்து பாடுவேன் என்று கூறினாா்.