மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அரவிந்தசாமி ஒரே வருடத்தில் மீண்டும் கோலிவுட்டில் பிசியான நடிகராக மாறிவிட்டார். இன்றைய இளையதலைமுறை நடிகர்களுக்கு இணையாக அவரும் கைநிறைய படங்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் கார்த்திக் நரேனின் இரண்டாவது படமான ‘நரகாசுரன்’. இவரது முதல் படமான ‘துருவங்கள் 16’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது,.

இந்த நிலையில் இந்த படத்தில் பாடல்களே இல்லை என்ற புதுமையான தகவல் வெளிவந்துள்ளது. சிவாஜி கணேசனின் ‘அந்த நாள்’, கமல்ஹாசனின் ‘குருதிப்புனல்’ உள்பட பல படங்கள் தமிழில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த நிலையில், அந்த வரிசையில் இந்த படமும் இணைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்தசாமி, சந்தீப் கிஷான், ஸ்ரேயா, இந்திரஜித் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் என்பவர் இசையமைக்கின்றார்.