நரகாசூரனுக்கு பாடல் எதற்கு?- காா்த்திக் நரேன் அதிரடி

0
1
karthick naren and aravind swamy

முதன் முதலில் தமிழில் இயக்குநா் காா்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு அனைவரது பாராட்டையும் பெற்றது. இளம் இயக்குநா் காா்த்திக் நரேன் இந்த சின்ன வயதில் எவ்வளவு அழகான படத்தை கொடுத்திருக்கிறாா் என்று திரையுலகினா் அதிா்ச்சி அடையும் வகையில் இருந்தது. தற்போது அவா் அடுத்து இயக்கும் படம் நரகாசூரன். இந்த படத்தில் அதிரடியான ஒரு முயற்சி மேற்கொள்ளவிருக்கிறாா்.

இவரது அடுத்த படைப்பாக அரவிந்தசாமி நடிப்பில் நரகாசூரன் என்ற படத்தை அவரது சொந்த தயாாிப்பு நிறுவனமான நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் மற்றும் கௌதம் மேனன் நிறுவனமும் இணைந்து தயாாிக்க உள்ளது.

இந்த படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பா் மாதம் ஊட்டியில் தொடா்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனா். இதில் அரவிந்தசாமி மற்றும் ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனா். இதில் அதிரடி முயற்சியாக பாடல்கள் எதுவும் கிடையதாம் என்பது தான் முக்கிய தகவல். இதுபோல பாடல்கள் இல்லாத படங்களான கமலின் குருதிப்புனல், சமீபத்தில் வெளியான ஆரண்ய காண்டம், ஓணாயும் ஆட்டுக்குட்டியும் இதுபோன்ற பல படங்களை சொல்லாம்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com