நோக்கியா 9 ப்யூர் வியூ என்ற புதிய மாடல் போனை இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

நோக்கியா நிறுவனம் சென்னையில் கம்பெனியை மூடிவிட்டு சென்ற பிறகு சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்திய சந்தைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பதற்காக இப்போது புதிய மாடல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நோக்கியா 9 ப்யூர் வியூ என்ற புதிய மாடல் போனை இந்தியாவில் ஜூன் 17 ஆம் சந்தைக்குக் கொண்டு வருகிறது. இந்த போன் பின்பக்கம் மட்டும் மொத்தம் 5 கேமராக்கள். ஒவ்வொன்றும் 16 பிக்சல் ஒளிநுட்பம் கொண்டவை. அதேப்போல முன்பக்கம் 20 மெகா பிக்ஸல் கொண்ட செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலின் சிறப்பு அம்சங்கள்

  • 99 இன்ச் முழு டிஸ்ப்ளே
  • 1440×2960 பிக்சல்ஸ் அளவு கொண்ட வீடியோ திரை
  • 6 ஜிபி RAM
  • ஸ்னாப்ட்ராகன் குவால்காம் ப்ராஸசர்
  • 128 ஜிபி போன் மெமரி
  • 350 mAh பேட்டரி
  • வாட்டர் ரெசிஸ்டண்ட் திறன்

இந்த மாடலை அமேசான் மற்றும் பிற ஆன்லைன் இணையதளங்கள் மூலமாகவும் வாங்கலாம். ஜூன் 17 க்கு முன்பு நோக்கியாவின் அதிகாரபூர்வ வலைதளத்தில் ஆர்டர் செய்தால் 5000 ரூபாய் கேஷ்பேக் உடன் நோக்கியா 705 ஹெட்செட் இலவசமாக கிடைக்கும்.