தீபாவளிக்கு என் ஜி கே இல்லை

சூர்யா நடிக்க செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் என் ஜி கே. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

சூர்யாவின் ரசிகர்களும், செல்வராகவனின் வித்தியாச படங்களை ரசிப்பவர்களும் இப்படத்தை எதிர்பார்த்தனர் இந்த நிலையில் இப்படம் தீபாவளிக்கு வராது என படக்குழு கூறியுள்ளது.

குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடியாமல் போனதால் இப்படம் வெளிவருவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தீபாவளிக்கு பிறகு சில நாட்களில் இப்படம் கண்டிப்பாக வெளிவரும் என தெரிகிறது.