தமிழ் சினிமாவில் சோபிக்காத முன்னணி எழுத்தாளர்கள்
தமிழில் வந்த திரைப்படங்களில் எழுத்தாளர்கள் பெரிய அளவில் சோபித்திருக்கிறார்களா என்றால் அதிகம் நபர்களை சொல்லலாம்.

முன்னணி இயக்குனராக தற்போது ஜிப்ஸி படம் வரை இயக்கி வரும் ராஜூ முருகன் ஒரு எழுத்தாளர்தான் இப்படி எழுத்தாளர்கள் அனேகம் பெயரை சொல்லி கொண்டே செல்லலாம்.

அதாவது வார மாத இதழ்களில்கதை எழுதும் முன்னணி கதை எழுத்தாளர்கள் , ஜெயித்தார்களா என்றால் ஓர் இருவர் ஜெயித்திருக்கலாம் ஆனால் பெரிய அளவில் யாரும் ஜெயிக்கவில்லை என்பது தமிழ் சினிமாவின் ஒரு சாபக்கேடான விஷயம்தான்.

இன்றுவரை இந்த எழுத்தாளர்கள் வார மாத இதழ்களில் மட்டுமே திறம்பட எழுதி கொண்டிருக்கின்றனர்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படமாக வந்தது கதையாக வந்த அளவுக்கு திரைப்படத்தில் பலரும் ரசிக்கவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  என்னால் மக்களுக்கு கூட அடிமையாக இருக்க முடியாது: சத்யராஜ்

பிரபல சஸ்பென்ஸ் நாவல் எழுத்தாளர் கறுப்பு கண்ணாடியை அடையாளமாக கொண்ட எழுத்தாளர் தமிழ்வாணனின் சங்கர்லால் நாவல் கூட படமாக வந்து பெரிய தோல்வியை தழுவியது.

இவ்வளவு ஏன் சுஜாதா எழுதிய சஸ்பென்ஸ் நாவலான கரையெல்லாம் செண்பகப்பூ விகடன் இதழில் தொடராக வந்து சக்கைப்போடு போட்டதால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. திரைப்படம் நன்றாக இருந்தாலும் நாவலை வாசித்து ரசித்த அளவு மக்களால் திரைப்படத்தை ரசித்து வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இதே போல ராக்கெட் கடத்தலின் பின்புலத்தில் அமைந்த சுஜாதா எழுதிய விக்ரம் கதையையும் கூறலாம் இன்று வரை எண்பதுகளின் மாடர்னான படம்,கம்ப்யூட்டரை முதன் முதலில் காண்பித்த படம் என்று விக்ரம் படம் பேசப்படுகிறதே தவிர படம் வெற்றிப்படமாக அமையவில்லை.

க்ரைம் கதை எழுதுவதில் புகழ்பெற்றவர் எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்களே அவரின் எண்ணிலடங்கா நாவல்களை அவரின் வாசகர்கள் வாசித்து ரசித்திருக்கிறார்கள்,ஆனால் சினிமாத்துறையில் தான் அதிகம் ஏமாற்றப்பட்டதையும் தன் கதைகள் திருடப்பட்டு அதற்குரிய இழப்பீடுகளை கூட பலர் தராமல் ஏமாற்றியது பற்றி திரு ராஜேஸ்குமார் அவர்களே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  ஜெயலலிதா இருக்கும்போதே கட்டம் கட்டபட்டவன் நான்: கமல்ஹாசன்

சில வருடங்களாக அவரின் நாவல்கள் தகுந்த முறையில் கையாளப்பட்டு குற்றம் 23, சண்டாமாருதம் உள்ளிட்ட இவரின் கதைகள் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. இருந்தாலும் இந்த திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியை அடைய முடியவில்லை.

எழுத்தாளர் இந்திரா செளந்தராஜன் அவர்கள் மர்மம் அமானுஷ்யம் கலந்து எழுதுவதில் வல்லவர், இவரின் கோட்டைப்புரத்து வீடு, அதுமட்டும் ரகசியம், மர்மதேசம் உள்ளிட்ட நாவல்கள் நாவல்களாக எழுத்து வடிவிலும்டி வி தொடராகவும் வந்து மிகப்பெரும் பெயரை இவருக்கு பெற்று தந்திருக்கிறது. ஆனால் இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் இயக்குனர் நாகா இயக்கத்தில் வந்த இவரின் ஆனந்த புரத்து வீடு  திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க பாஸ்-  கேரளாவில் கலவரங்கள் யாரால் உருவாக்கப்படுகிறது-கமல் பதில்

இவ்வளவு பேர் சினிமாவில் பயங்கர தோல்வியை சந்தித்து இருந்தாலும் ஒரு சில எழுத்தாளர்கள் வெற்றிக்கோட்டை லேசாக தொட்டிருக்கின்றனர் அவற்றில் இரட்டை எழுத்தாளர்களான சுபாவின் நாவல்கள் இயக்குனர் கே.வி ஆனந்தால் மெருகேற்றப்பட்டு நல்ல திரைப்படங்களாக வந்துள்ளன. வியாபார ரீதியில் வெற்றியும் பெற்றுள்ளன.

அதே போல் இயக்குனர் பாலகுமாரனும் இது நம்ம ஆளு படத்தை இயக்கி வெற்றிபெற செய்துள்ளார். ஆனால் கதை இவர் இல்லை கே பாக்யராஜ் கதை திரைக்கதை எழுதினார்.

இவ்வளவு சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் சினிமாவாக பெரிய அளவில் வரவில்லையே என வருத்தம் அந்த எழுத்தாளர்களின் ரசிகர்களுக்கும் உண்டு. இவ்வளவு மேதைகளின் எழுத்துக்களை திரைவடிவில் சரியாக கொண்டு வராதது துரதிருஷ்டவசமாக அக்கதைகளை சரியாக கையாளாத இயக்குனர்களின் பொறுப்பேயாகும்.