தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா இசையுலக பிதாமகன் இளையராஜாவின் மகனான இவர் அரவிந்தன் என்ற சரத்குமார் நடித்த படத்தில் அறிமுகமானார். அறிமுகமான காலத்தில் இருந்து, அதிகபட்ச மியூசிக்கல் ஹிட் கொடுத்த இளையதலைமுறை இசையமைப்பாளர் இவராகத்தான் இருக்க முடியும்.

இவரின் 7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை, காதல் கொண்டேன். சென்னை60028 என இவரின் பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாத பாடல்கள்

அஜீத் நடித்த பில்லா, மங்காத்தா போன்ற படங்களுக்கு இவர் இசைத்த பின்னணி இசையே இன்றுவரை ஒரு மாஸ் அட்ராக்சனை கொடுத்து வருகிறது.

விஜய்,அஜீத், தனுஷ் ,சிம்பு என யுவன் பலருடன் பணியாற்றி இருந்தாலும் ரஜினியோடு பணியாற்றாதது வருத்தமே குறிப்பாக பின்னணி இசையில் தெறிக்கவிடும் யுவனுடன் ரஜினி இணைந்தாலே உண்மையில் அப்படத்தில் ரஜினி வரும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் குறிப்பாக ஸ்டைலான காட்சிகளுக்கு உண்மையில் யுவன் தெறிக்க விட்டிருப்பார்

என்பதும் யுவன் இசைக்கு வெறிகொண்ட ரசிகர்களின் எண்ணம்.

ஆனால் ரஜினியிடம் ஒரு பழக்கம் உண்டு கே.எஸ் ரவிக்குமார், ஷங்கர்,ஏ.ஆர் ரஹ்மான் இந்த கூட்டணியோடு மட்டுமே தொடர்ந்து இணைவார்.

வாய்ப்பளித்த இயக்குனர்களுக்கே திரும்ப திரும்ப வாய்ப்பளிப்பார் வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கே திரும்ப திரும்ப வாய்ப்பளிப்பார்.

இவ்வளவு வருஷமாகியும் இவ்வளவு முன்னணி இசையமைப்பாளராக யுவன் உயர்ந்தும் ஸ்டைலான இசையை கொடுக்க கூடிய யுவனின் இசையை ரஜினி தனது படத்திற்கு வைக்கவில்லை.

யுவனுக்கு பின் வந்த ஜி.வி பிரகாஷ்,சந்தோஷ் நாராயணன், அனிருத் போன்றோருக்கெல்லாம் திரும்ப திரும்ப வாய்ப்புகளை வழங்கும் ரஜினி யுவனை திரும்பியே பார்க்காதது வருத்தமே.