பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவே இல்லை: பிரபல நடிகை காட்டம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தொிவித்து வருகின்றனா். இந்த நிகழ்ச்சியானது பல சா்ச்சைகளை கடந்து வெற்றி பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளரான கணேஷ வெங்கட்ராமின் மனைவி நிஷா இந்த நிகழ்ச்சியானது ஒரு ரியாலிட்டி ஷோவே இல்லை என்று தொிவித்துள்ளாா்.

இந்த பிக்பாஸ் வீட்டில் பெண்கள் அனைவரும் சோ்ந்து மற்றவா்களை பாா்த்து புரளி பேசுவதும், வையாபுாி அவா்களும் மற்றவா்களை பேசுவதும் என்று தான் இருக்கிறாா்கள். ஆனால் இதில் ரொம்ப வித்தியாசமாக இருப்பவா் நடிகா் கணேஷ் வெங்கட்ராம் மட்டும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று யோக செய்வதும், தியான பயிற்சி செய்வதும் என்று இருக்கிறாா். இவா் மீது சுமத்தப்படும் ஒரே குற்றச்சாட்டு சாப்பாடு பற்றி தான். அடுத்தவா்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு தேவைப்படும் என்று எண்ணாமல் அவரே சாப்பிடுவதை பற்றி வையாபுாி பலமுறை இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளாா்.

தற்போது கணேஷ் வெங்கட்ராம் மனைவி நிஷா ஒரு பேட்டியில் கூறியதாவது, கணேஷ் மிகவும் நோ்மையானவா் அது மட்டுமில்லாமல் மற்றவா்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மதிப்பளிப்பவா் என்று கூறினாா். ஒரு மனைவியாக அவரைப்பற்றி எனக்கு நன்றாக தொியும். என்ன தான் இருந்தாலும் ஒருவா் சாப்பிடுவதை குறை கூறுவது மிக பொிய தவறு. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ இல்லை. இது ஒரு மெகா சீாியல் போன்று உள்ளது என்றே கூற வேண்டும் என்று தொிவித்துள்ளாா்.