நயன் தாரா, அதர்வா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் இன்று ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி படம் பார்த்த ரசிகர்களும். நயன் தாராவின் ரசிகர்களும், அனுராக் காஷ்யப்பின் அட்டகாசமான க்ரைம் ஹிந்தி படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

திடீரென சில செட்டில்மெண்ட் பிரச்சினைகளால் காலையில் படம் ரிலீஸ் ஆவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பலரும் தியேட்டர் சென்று பார்த்துவிட்டு படம் ரிலீஸ் ஆகவில்லை என வருத்தத்தில் உள்ளனர்.

உலகநாடுகள் எங்கிலும் இமைக்கா நொடிகளுக்கான காலை காட்சிகளுக்கான டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று மதியம் ரிலீஸ் ஆகலாம் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.