பழமையான இயக்குனர் திருப்பதி ராஜன் என்பவர் , ஒரு டிவிக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் சில்க் பற்றிய சில பரபரப்பான விசயங்களை கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதாவை வினுசக்கரவர்த்திதான் அறிமுகப்படுத்தினார் என்பது ஏற்புடையது அல்ல அவரை நான் தான் அறிமுகப்படுத்தினேன்.

கடந்த 1980ம் ஆண்டு அவருக்கு சுமிதா என்ற பெயரையும் வைத்து 6000 பணமும் கொடுத்து என்னுடைய வீணையும் நாதமும் படத்தில் நடிக்க வைத்தேன். ஒருநாள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த வினுசக்ரவர்த்தி தன்னுடைய படத்தில் சிலுக்குவை நடிக்க வைத்து தான் அறிமுகப்படுத்தியதாக தெரிவித்து விட்டார்.

என்னுடைய படத்தை நடித்து கொடுக்காமல் பாதியில் கை விட்டார். அதனால் அவர் மீது கோபத்தில் இருந்த நான் பல வருடமாக பேசவில்லை.

இறப்பதற்கு ஒரு 10 நாள் முன் என்னை அழைத்திருந்தார், அவர் மீது சமாதானமாகி சென்ற நான் அவரை பார்த்தேன்.

படப்பிடிப்பில் நான் சென்று பார்த்தபோது என்னை ஏன் அழைத்தாய் என கேட்டேன். அப்போது அவர் கண்கலங்கினார். உடனே அவர் ஏதோ கஷ்டத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அவரை பார்க்க வீட்டுக்கு சென்றபோது கூட ஒரு 4 அல்லது 5 குண்டர்கள் பாதுகாப்பாக இருந்து என்னை பார்க்க விடாமல் தடுத்தனர்.

தாடிக்காரர் ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் சில்க் ஸ்மிதா இருந்தார். அந்த தாடிக்காரர் அவருக்கு சப்போர்ட்டாக இருந்தது உண்மைதான். ஆனால் என்னுடைய படங்களில் அவர் நடித்த போது அந்த தாடிக்காரர் வந்ததில்லை. ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த படங்களில் அந்த தாடிக்காரர் உடன் இருப்பார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அந்த தாடிக்காரரின் பிடியில்தான் சில்க் இருந்தார்.

சில அரசியல்வாதிகளின் பிடியிலும் சில்க் மாட்டி அவரிடம் இருந்த பணம் எல்லாம் பறிபோய் நின்றார்.மீது நிறைய பேர் ஆசைப்பட்டனர். கடைசியாக சில்க் இறந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு என்னென்ன கொடுமைகளை எத்தனை பேர் செய்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து விட்டார் என்று சொல்கிறார்கள். அது தற்கொலையாக தெரியவில்லை டர்ட்டி பிக்சர் படத்தில் காட்டப்பட்ட சில்க் ஸ்மிதாவுக்கும் நிஜத்தில் இருந்த ஸ்மிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

ஒரிஜினல் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை நான் எழுதி வருகிறேன் என்றார்.