இளம் நர்ஸ் ஒருவர் விடுதியில் கொலை செய்யப்பட்ட விவகாரம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ அம்பேகர் நகரில் வசிப்பர் சமந்தா(24). இவர் அந்த பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்படது. நாளடையில் நட்பு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை : உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!

இந்நிலையில், இருவரும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் சமந்தாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் உள்ளே வந்த போது சமந்தா பிணமாக கிடந்துள்ளார். மேலும், அங்கு ராஜேஷ் எழுதிய கடிதமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  பிரியாணியில் பீஸ் இல்லை - கோயம்பேட்டில் இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை

அதில், தனது காதலி எப்போதும் தன்னிடம் சண்டை போட்டுக்கொண்டே இருந்ததால், ஆத்திரத்தில் அவளை கொலை செய்துவிட்டதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சமந்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலை செய்வதாய் கூறி சென்ற ராஜேஷையும் தேடி வருகின்றனர்.