குமரியில் 5 மாதம் கர்ப்பமாக இருந்த நர்சிங் மாணவியை அவரது காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா(23). நர்சிங் மாணவியான இவர் தனியர் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தர். ஶ்ரீஜாவும் பிபின் (26) என்ற வேன் டிரைவரும் காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கி பழகியதால் ஶ்ரீஜா கர்ப்பமனார்.

இதையும் படிங்க பாஸ்-  பெண்களை கொலை செய்து வீடியோ எடுக்கும் சைக்கோ....

ஶ்ரீஜா 5 மாத கர்ப்பிணியாக இருந்தநிலையில் பிபினிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிபின் ஶ்ரீஜாவை குழித்துறை ஆற்று பாலத்தில் தள்ளி கொலை செய்தான்.

இந்த கொலை குறித்து விசாரித்து வந்த போலீஸார் பிபினை கைது செய்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.