முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, பதவி முடிந்த பின்னர் தற்போது ஓய்வில் உள்ளார். இந்த நிலையில் ஆன்லைன் இணையதளமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக அவர் டாகுமெண்டரி குறும்படங்களை தயாரிக்கவுள்ளாராம்

வாக்களிப்பதன் அவசியம், அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை, அமெரிக்காவின் தட்பவெப்ப நிலை, உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்து கொள்வது எப்படி? போன்ற குறும்படங்களை தயாரிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த படங்களில் ஒருசிலவற்றில் ஒபாமா மனைவி மிச்சேல் அவர்களும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒபாமாவின் இந்த புதிய முயற்சிக்கு அமெரிக்க மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.,