கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்புக்கு சென்றிருந்த சல்மான்கான் அபூர்வவகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த வழக்கு ஒன்று கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பில் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் அளிக்கப்பட்டது. தீர்ப்பை அடுத்து சல்மான்கான், நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து சல்மான்கானின் வழக்கறிஞர், ஆனந்த் தேஸ் கூறியபோது, ‘நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தாலும், அவர்களது தீர்ப்பை நான் மதிக்கிறேன். இருப்பினும், தற்காலிகமாக தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அல்லது ஜாமீன் வழங்கக்கோரி நாளை காலை 10.30 மணியளவில் ஹியரிங் நடத்த நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘சல்மான் கானுக்கு சிறை உடை நாளை வழங்கப்படும் என்றும், அவருக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜோத்பூர் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.