ஒரு நல்ல காரியத்திற்காக பிரகாஷ்ராஜ் முன்னாள் மனைவியுடன் இணைந்த விஷால்

நடிகர்சங்க செயலாளர் விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலமாகவும், நடிகர் சங்கம் மூலமாகவும் பல சீனியர் நடிகர்களுக்கு உதவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சீனியர் நடிகர், நடிகைகளுக்காக ஒரு முதியோர் இல்லம் ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளார்.

இந்த ஐடியாவை நடிகையும் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியுமான லலிதகுமாரி தன்னிடம் தெரிவித்ததாகவும், அதுமட்டுமின்றி அவருக்கு சொந்தமான ஈசிஆர் நிலம் ஒன்றையும் இதற்காக அவர் தருவதற்கு முன்வந்துள்ளதாகவும் விஷால் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். லலிதகுமாரியுடன் இணைந்து விரைவில் முதியோர் இல்லம் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

வசதியான தங்கும் வசதி, உணவு, மருத்துவ வசதி, நூலகம் உள்பட அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படவுள்ள இந்த முதியோர் இல்லம், குடும்பத்தினர்களால் கைவிடப்பட்ட சீனியர் நடிகர், நடிகைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் விஷால் கூறியுள்ளார்.