எந்த பார்மட்டில் படம் எடுப்பது தமிழ்ப்படத்தால் தமிழ்த்திரையுலகம் குழப்பம்

தமிழ் சினிமாவுக்கென சில பார்மட் உண்டு அது, ஒரே போலவே பல வருடங்கள் தொடர்ந்து அதே பார்மட்டிலேயே படம் எடுப்பர். அந்தக்கால படங்களில் 40,50 பாடல்கள் உள்ள படங்கள் வந்தது ஒரு பார்மட், க்ளைமாக்ஸில் போலீஸ் வருவது, கதாநாயனுக்கோ கதாநாயகிக்கோ கேன்சர் இருக்கும் விஷயத்தை மறைத்து தன் காதலை வெறுப்பது, தாய் தந்தையை ஆரம்ப காட்சியிலேயே வில்லன் கொலை செய்வது வளர்ந்து வாலிபனான சகோதரர்கள் அந்த வில்லனை பழிவாங்குவது இது போல கதைகள் சில வருடத்துக்கு முன் வந்த பார்மட்.

இதை எல்லாம் லொள்ளு சபா இன்னும் பிற காமெடி நிகழ்ச்சிகளில் கலாய்த்து தள்ளினர் ஒரு கட்டத்தில் இந்த பார்மட் மாறியது. அழகி, காக்க காக்க, வெயில் உள்ளிட்ட படங்களில் எல்லாம் கதாநாயகனே என் பேரு சிவா என தனக்குத்தானே தனது ப்ளாஷ்பேக்கை சொல்லி அறிமுகமாவது மட்டுமல்லாமல் கடைசி வரை தன் ப்ளாஷ்பேக்கை தானே சொல்வது , சில அமானுஷ்யபடங்களில் ஒரு சாமியார் திடீரென வந்து நீ யார் தெரியுமா ருத்ரன் அந்த சிவனின் மகன் என சொல்வது, மிஷ்கின் வைப்பது போல வித்தியாசமான ஷாட்கள் வைப்பது, அந்தக்கால டீக்கடை சண்டைக்காட்சிகள் போல் அல்லாமல் சண்டைக்காட்சிகளை மிக வித்தியாசமான முறையில் சேஸிங் செய்து படமாக்குவது என திரையுலகத்துக்கு என்ற டிரெண்ட் இடையில் மாறியது.

ஆனால் அடுத்த ட்ரெண்ட் என்று மாறாமல் இன்னும் பல காட்சியமைப்புகள் அதே மாதிரியே மாறாமல் தொடர்கின்றன. வித்தியாசமான கதைகள் மூலம் வெற்றிபெற்றுவரும் படங்களையும் இது சாரும்

 இதை தமிழ்ப்படம் 2.0வில் வைத்து செய்திருக்கிறார் இயக்குனர்.

பார்க்கும் நமக்குமே இதெல்லாம் தொடர்ந்து திரைப்படங்களில் வரும் காட்சியமைப்புகளாகவே உள்ளனவே இதெல்லாம் மாறாதா என நம் மனதை நினைக்க வைக்கிறது.

ஆனால் இது போன்ற காட்சியமைப்புகளை மாற்றுவது திரையுலகத்தால் முடியாத காரியம்.

இது போல சில ஒரே மாதிரியான காட்சிகளை மாற்றி அமைத்தால் தமிழ் சினிமா இன்னும் புதிய உயரங்களை தொட முடியும் என்பது சினிமா ஆர்வலர்களின் கருத்து